படை எடுக்கும் சுற்றுலா பயணிகள்; நெருக்கடிகளில் இருந்து மீளும் இலங்கை!
இலங்கைக்கு அண்மைய நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிதுது வருகின்றது. இந்நிலையில் இலங்கை நெருக்கடிகடிலி இருந்து விரைவில் மீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் நேற்றையதினம் பெருமளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி ஐரோப்பிய நாடுகளான, பிரான்ஸ் , ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்தும், மற்றும் பிரித்தானியா, ரக்ஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் இந்தியாவில் இருந்தும் பெருமளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதன் காரணமாக அண்டை நாடுகளிடம் கடனுக்காக கையேந்தும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளதனால் விரைவில் நாடு மீண்டெழும் சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
