தலிபான்களால் கொல்லப்பட்ட தந்தை; 11 வயதில் தப்பிச்சென்ற சிறுமி; தற்போது அவரின் நிலை!
தலிபான்களால் தந்தை கொல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து 11 வயதில் தப்பித்த நாடியா நதிம் எனும் சிறுமி, கால்பந்தாட்ட வீராங்கனை, மருத்துவர் எனத் தனது கனவுகளை நனவாக்கிக் கொண்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 2,000ஆம் ஆண்டு தலிபான்களால் நாடியாவின் தந்தை கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாடியாவின் குடும்பம் பாகிஸ்தான் வழியாக டென்மார்க் சென்றது.
டென்மார்க் தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்த நாடியா, கால்பந்து பயிற்சியைத் தீவிரமாக மேற்கொண்டார். படிப்படியாக முன்னேறி நாடியா தனது தீவிர முயற்சியால் டென்மார்க் மகளிர் அணியில் இடம்பெற்றார்.
டென்மார்க் நாட்டிற்காக இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 200 கோல்களை நாடியா அடித்துள்ளார். மான்செஸ்டர் அணிக்காகவும் நாடியா விளையாடியுள்ளார்.

அதேசமயம் கால்பந்து மட்டுமே நாடியாவின் கனவாக அல்லாமல், சுமார் 11 மொழிகளைக் கற்றுக்கொண்ட நாடியா, மருத்துவப் படிப்பை முடித்து தற்போது மருத்துவராகவும் பட்டம் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த சிறந்த விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் நாடியா 20ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகின் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் நாடியாவும் ஒருவர். இந்த நிலையில் மக்கள் சேவை செய்யும் பொருட்டே தற்போது மருத்துவராகி இருப்பதாக நாடியா தெரிவித்துள்ளார்.
Thanks to everyone who has been supporting me from day 1, and all new friends I made along the road. I could not have done it without you, and I will forever be grateful for your support ❤️
— Nadia Nadim (@nadia_nadim) January 14, 2022
For the haters, I did it again. Kicked a** and there’s nothing you can do about it! pic.twitter.com/zqdy3kay0b
இது குறித்து நாடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடியா,
என்னை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுக்கு எப்போது கடமைப்பட்டிருப்பேன்.
என்னை வெறுப்பவர்களுக்கு… நான் மீண்டும் சாதித்துக் காட்டிவிட்டேன். நீங்கள் எதுவும் செய்ய முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.