யாழில் 8 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு நேர்ந்த கதி
யாழ்.கொடிகாமம் - வேம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. புத்தூர் வீதி ஊடாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று மீசாலை- வேம்பிராய் பகுதியில் கிளை வீதி ஒன்றினுள் திருப்ப முற்பட்டவேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தில் மந்துவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கால் முறிந்த நிலையிலும், 37வயதான அவரது தாய் தலையில் படுகாயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் மீசாலை வடக்கைச் சேர்ந்த 17 வயது இளைஞன் காலில் காயமடைந்த நிலையிலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மூவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்