தனுஷ் - சமந்தாவை தொடர்ந்து அடுத்து விவாகரத்து செய்யப் போகும் பிரபல நடிகை!
சினிமா அல்லது டிவி நட்சத்திரங்கள் எவ்வளவு ஆசை ஆசையாக திருமணம் செய்து கொள்கிறார்களே அதை விட வேகமாக விவாகரத்து செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடைசியாக மொத்த இந்திய சினிமாவையும் பரபரப்பில் ஆழ்த்தியது நடிகர் தனுஷ் (Dhanush)- ஐஸ்வர்யா விவாகரத்து தான். 18 வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த தன் மனைவியை நொடியில் விவாகரத்து செய்தார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமா முதல் இந்திய சினிமாவைக் கலக்கிய முன்னணி நடிகை ஒருவர் விவாகரத்தில் அடியெடுத்து வைக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) ஹிந்தி சினிமாவில் பிரபலமான இவர் தமிழிலும் படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் IPL யில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) என்ற அணியை நடத்தி வருகிறார். மேலும் இவர் ராஜ் குந்த்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ராஜ்குந்த்ரா இளம் நடிகைகள் மற்றும் பெண்களை வைத்து மோசமான படங்களை எடுத்து வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்து வந்ததாக ஒரு செய்தி வெளியானதை தொடர்ந்து விசாரணையில் அது உண்மைதான் என்பது தெரிய வந்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அதற்கான விசாரணை கூட நடைபெற்று வருகிறது.
இதேவேளை, தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்த கணவரை உடனடியாக விவாகரத்து செய்துவிடும் வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறாராம் ஷில்பா ஷெட்டி. (Shilpa Shetty) ஷில்பா ஷெட்டிக்கும் அவரது கணவரின் இந்த விவகாரத்துக்கும் என பலமுறை நீதிமன்ற வாசல் படி ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வெறுத்துப்போன ஷில்பா ஷெட்டி இனிமேல் இவருடன் வாழ முடியாது என்ற முடிவை எடுத்து விரைவில் விவாகரத்துக்கு மேல்முறையீடு செய்ய உள்ளாராம். அடுத்த விவாகரத்தாக இருக்கப் போகிறது என சினிமா வட்டாரம் கூறப்படுகின்றது.