பாதையின் எஞ்சின் பழுதடைந்தது...அலட்சியமாக செயல்படும் ஆர்.டி.ஏ
காரை நகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பாதை கடந்த சில தினங்களாக சேவையில் ஈடுபடாமல் பல இன்னல்களை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக,ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் நீதிமன்று மற்றும் ஊர்காவற்று ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
மேலும் பாதையின் வெளியிணைப்பு பழுதடைந்துலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் பாதையில் கேபிள் அறுந்து விழுதல், வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைதல் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாட்களுக்குள் திருத்தம் செய்கின்றதா என பாதை பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.