பேத்தியுடன் சண்டையிட்ட முதியவர் விபரீத முடிவு
வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் 85 வயது முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்ணகிபுரத்தைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.
பேத்திக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரமடைந்த முதியவர் கற்களை வீசி அவரை தாக்கியுள்ளார்,அதனால் படுகாயம் அடைந்த பேத்தியை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முதியவர் பயந்து தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடினார்.
நேரமாகியும் முதியவர் வெளியில் வராததால் சந்தேகம் கொண்டு கதவை திறந்து பார்த்தபோது நைலோன் கயிற்றினால் களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.