எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த கழிபொருட்க்களை அகற்ற தீவிர முயற்சி
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பான அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்த தகவலை வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கூறியுள்ளார்.
இதன்படி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அழிவினை அடுத்து கடலில் வீழ்ந்துள்ள கழிபொருட்களை அகற்றுவதற்காக சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளன.
மேலும் சேதமடைந்த பொருட்களை அகற்றுவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்காக இந்த இரண்டு கப்பல்களாலும் பூர்வாங்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மே மாதத்திற்குள் தமது பணிகள் அனைத்தும் நிறைவடையும் என சீன நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.