குடும்பத் தகராறில் ஏற்பட்ட விபரீதம்; நிர்கதியான குழந்தை
குடும்ப தகராறில் , கனமான பொருளினால் கணவர் மனைவி தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அயகம, மாவத்தஹேன, பியம்புர பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்துவந்த பெண் ஒருவரே இவ்வாறு கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர் கோனார முதியன்சேலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தயா நிஷாந்தி ஹரிச்சந்திர என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சமபவம் தொடர்பில் சந்தேக நபரான 27 வயது கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் தமது இரண்டு வயது மகனுடன் ஜனவரி 15 ஆம் திகதி குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்துவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தம்பதியினர் இருவரும் தினக்கூலிகளாக வேலை செய்து வந்த நிலையில் , முன்னதாக குருநாகல் மற்றும் கலவான பிரதேசங்களில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.