நடிகர் தனுஷ் பட வாய்ப்பு கொடுத்ததற்கான ரகசியத்தை சொன்ன டிடி!
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி என செல்லமாக அழைக்கப்படுபவர்தான் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும், இவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். டிடி நளதமயந்தி என்னும் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
நளதமயந்தி திரைப்படத்தில் டிடி, மாதவனுக்கு தங்கையாக நடித்து இருப்பார். இதையடுத்து டிவி நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வந்த டிடிக்கு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் டிடிக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியது, ஒருமுறை நடிகர் தனுஷ் எனக்கு போன் செய்து தான் இயக்கும் படத்தில் ஒரு சின்ன காதபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார். தனுஷ் மாதிரி ஒருவர் எடுக்கும்பொழுது வேண்டாம் என்று எப்படி சொல்வது. அதனால் நானும் சந்தோஷமாக அதற்கு ஒப்புக் கொண்டேன்.
மேலும் தனுஷ் என்னிடம் இந்தப் படத்தில் பெண்களுக்கு ஒரு தகவல் சொல்லணும், அதை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்றால் நன்றாக இருக்கும் அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார்.
அவர் சொன்ன அந்த வார்த்தைக்காகத்தான் நான் அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தேன் என்று டிடி திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்போது நடிகர் விகரம் நடிக்கும் துருவ நட்சத்திரம், பிக்பாஸ் புகழ் வருண் நடிக்கும் ஜோஸ்வா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதிலும் ஜோஸ்வா திரைப்படத்தில் டிடி பொலிஸ் காதபாத்திரத்தில் மிகவும் துணிச்சலாக நடித்துள்ளார். இதுகுறித்த ட்ரெய்லர் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.