"தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெறவில்லை"...மனம் திறந்த கஸ்தூரிராஜா
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தனுஷ் அவர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுது மகளான ஐஸ்வர்யா அவர்களுக்கும் கடந்த 2004 ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சுமார் 18 ஆண்டு திருமண வாழ்க்கையானது முடிவுக்கு வந்துள்ளதாக நடிகர் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையும் பிரபல திரைப்பட இயக்குனருமான கஸ்தூரிராஜா கூறியதாவது,
கணவன்,மனைவி சண்டைகள் என்பது இயல்பு தான், இருவருக்குமான கருத்துகள் முரண்படுவதாலே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுது பதிவில் இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளனரே தவிர விவாகரத்து பெறுவதாக கூறவில்லை.
இதனால் தயவு செய்து யாரும் அவ்வாறு பதிவிடாதீர்கள் என தெரிவித்தார்.
மீண்டும் இருவரும் இணைந்து வாழும் நல்ல முடிவினை எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.