பிரபல திரைப்பட நடிகர் விவேக் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரது மரணம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில், நேற்று காலையில் பேசி கொண்டிருந்த போது, அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வடபழநினியில் உள்ள, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்ட நிலையில் அங்கு இதய சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் .
அத்துடன் மருத்துவமனையில், உயிர் காக்கும், ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை விவேக்கிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.