பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்; அருந்திக மகன் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் மகன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.
ராகமவையில் உள்ள மருத்துவ பீடத்தின் விடுதிக்குள் அத்துமீறி நுழைத்து தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக, பி.எம்.டப்ள்யு ரக காரொன்றில் ஆட்களை அனுப்பியதாகக் கூறப்பட்ட நிலையில் அந்த காரும் தெஹிவளையில் வைத்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டபோதே, ஒன்பது பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் களனி பல்கழைக்கழக மருத்துவ மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் மகன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.