வங்கியொன்றில் 17 ஊழியர்களுக்கு கொரோனா; கடமையை செய்யுமாறு பணித்த அதிகாரி
கொழும்பு டியூக் வீதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
அண்மையில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட் டத்தில் பங்கேற்ற ஊழியர்களே இவ்வாறு தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அனைத்து ஊழியர்களுக்கும் பிசிஆர் சோதனைகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தங்கள் வேலையைத் தொடருமாறும் குறித்த அரச வங்கி தகவல் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளிலேயே ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனையை செய்துள்ளனர். இது தொடர்பில் MOH மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வங்கியில் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருந்தது.