சினிமாவை மிஞ்சிய சம்பவம்; காதலியை கரம் பிடிக்க மாமியாருக்கு கிட்னி கொடுத்த காதலன்; கடைசியில் நேர்ந்த சோகம்!
காதலியை கரம் பிடிக்க காதலியின் தாயாருக்கு இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானமாக அளித்த நிலையில், ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை கழற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மெக்ஸிகோவின் Baja California பகுதியைச் சேர்ந்த Uziel Martinez என்ற ஆசிரியரே இவ்வாறு காணொளி வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியபடி, “எனது காதலியின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தேன். ஆனால் நான் தானம் அளித்த ஒரு மாதத்துக்குள் என்னை ஏமாற்றிவிட்டு என் காதலி வேறு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்” என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் Martinezக்கு பலரும் ஆறுதல்கள் கூறி தேற்றி வரும் நிலையில், சிலரோ, காதலியை இப்படி பொதுவெளியில் அவமதித்து விட்டீர்களே என கடிந்து கொண்டுள்ளனர். அதேசமயம் குறித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ 14 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
அவர் வெளியிட்ட வீடியோவை இத்தனை பேர் பார்ப்பார்கள் என குறித்த நபர் கனவிலும் நினைத்து பார்த்திராத வகையில், அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.
இதை பார்த்து தர்மசங்கடம் அடைந்த Uziel Martinez, தனது காதலி மீது தனக்கு வெறுப்பு ஏதும் கிடையாது என்றும், எனினும் இந்த வீடியோ இத்தனை பேர் பார்க்கும் வகையில் பிரபலமடையும் என நான் எதிர்பார்க்கவில்லை” எனவும் கூறியுள்ளார்.