பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய பிரியங்கா! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
இதேவேளை இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிய போகின்றது.
பிக் பாஸ் சீசன் 5 யில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள். இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப், பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5 பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.
இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சக போட்டியாளரான தாமரை மாஸாக என்ரி கொடுத்திருந்தார். அவர்களைத் தொடர்ந்து வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் உள்ளே வந்துள்ளனர்,
இதேவேளை, மேலும் சில சீரியல் பிரபலங்கள் பலரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அது வேற யாரும் இல்லை. ஈரமான ரோஜா குழு மற்றும் செந்தூரப்பூவே சீரியல் குழு என பலரும் வருகை தந்தனர்.
இந்நிலையில், தீடீரென பிரியங்கா பிக்பாஸ் வீட்டை விட்டுவெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், பிக் பாஸில் இருந்து வெளியேறிய, பிரியங்கா தற்போது வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.