பிக்பாஸ் 5; வின்னர் ராஜுவிற்கு கிடைத்த பணம்... எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பிரபலமான போட்டியாளர்கள் அதிகம் இருக்கவில்லை என்பதல் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், மக்களிடையே நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைவாக இருந்ததென்றே சொல்லப்படுகின்றது.
எனினும் சில வாரங்களில் பார்வையாளர்களின் ஆர்வத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி ஈர்த்தது. குறிப்பாக பாவனி, அபிநய், அமீர் போன்றோர் சமூக வலைதளங்களில் அதிகம் பேசுபொருளாக இருந்ததுடன் மக்களின் ஆதரவை ராஜு துவக்கத்தில் இருந்தே பெற்றார்.
மற்ற போட்டியாளர்கள் அவர் அளவுக்கு பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் கணித்தபடியே ராஜுவே பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற ராஜுவிற்கு ரூ.50லட்சம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் 16 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ஊதியமாக ரூ.21 லட்சம் ரூபாவுமாக, மொத்தம் ரூ.71 லட்சத்துடன் ராஜு டைட்டிலை வென்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.