தனது முடிவை மாற்றிக்கொண்ட பானுக ராஜபக்ஷ!
அண்மையில் தனது ஓய்வை அறிவித்திருந்த பானுக ராஜபக்ஷ தனது முடிவை மீளப்பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, பானுக ராஜபக்ஷ தனது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அத்துடன் , விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கும் பானுக ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஓய்வு முடிவை பானுக ராஜபக்க்ஷ மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.