இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு கிடைத்த உதவி!
இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு வென்டிலேட்டர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கியதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய முகவரமைப்பின் ஊடாக இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் இஸ்ரேல் அரசாங்கத்தின் நன்கொடை கையளிக்கப்பட்டது.
இதன்போது இஸ்ரேலியத் தூதுவர் நவோர் கிலோன் இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் கையளித்தார். இவ்விழாவில் இஸ்ரேலின் தூதுவர் விக்கி விக்கிரமதுங்கவும் கலந்து கொண்டார்.
இலங்கையும் இஸ்ரேலும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டுள்ளது.
அதேவேளை கொரோனா தொற்று நோய் ஏற்பட்டத்தில் இருந்து, இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு பெறுமதி வாய்ந்த கோவிட்-19 தொடர்பான உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.