ஆசியாவின் வங்குரோத்து நாடாக மாறும் இலங்கை! சபையில் மார்க்கார்
ஆசியாவின் வங்குரோத்து நாடு எது என்று கேட்டால் அது இலங்கை என்று சொல்லும் அளவுக்கு தற்போது நாடு உள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற மரிக்கார் (S .M. Marikkar) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (19-01-2022) இடம்பெற்ற சபையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சபையில் அவர் மேலும் தெரிவித்தது, ஆசியாவில் சிறந்த நாடு எது என்று கேட்டால் இலங்கை என்று சொல்ல வேண்டிய நேரத்தில், வங்குரோத்து நாடு எது என்று கேட்டால் இலங்கை என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டது.
மேலும் இலங்கையை பொருளாதாரம் என்ற ரீதியில் முன்னேற்ற எவரும் யோசிக்கவில்லை. இப்பொழுது எதை விற்று எதை வாங்கலாம் என்று யோசிக்கின்றார்கள்.
இதேவேளை, இவர்களிடம் சரியான திட்டம் இல்லை. முதலில் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு தீர்வு வேண்டும். கொரோனா என்று சொல்ல வேண்டாம் .நாட்டில் டொலர் இல்லை, மக்களிடம் பணம் இல்லை இது தான் உண்மை நிலை என்றார்.