அவமதித்தவர்கள் மன்னிப்பு கேளுங்கள்; மத தலைவர்கள் போர்க்கொடி!
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முருத் தெட்டுவே ஆனந்த தேரரை அவமதிக்கும் வகையில் மாணவர்கள் நடந்துகொண்ட மாணவர்கள், தேரரிடம் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு கொழும்பு பல்கலைக்கழக உப வேந்தரும் மிகவும் கீழ்த் தரமான முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் மாண வர்களின் செயலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் கலகம தம்மரங்சி தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கல்லந்துகண்ட தம்மரங்சி தேரர் இதனை கூறினார்.
அதேவேளை தேரரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள், முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இஸ்லாம் மற்றும் சைவ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
எவ்வளவுதான் பசித்தாலும் சிங்கங்கள் ஒருபோதும் புல் மேய்வதில்லை!