பிரதான வீதி ஒன்றில் பயங்கர விபத்து: நபர் ஒருவர் ஆபத்தான நிலையில்!
இலங்கையில் பிரதான வீதி ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சாலியவெவ பகுதியில் 19வது மைல் கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவது, சாலியவெவ பகுதியில் 19வது மைல் கல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பாதம் உடலில் இருந்து தனியாக கழன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு விபத்துக்குள்ளான காரின் சாரதி தலைமன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான வைத்தியர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.