புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்பிய விமானம்! வெளியான பரபரப்பு தகவல்
அமெரிக்காவின் மயாமி நகரில் இருந்து பிரித்தானியாவின் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்றில் பயணி ஒருவர் முகக்கவம் அணிய மறுத்ததால் விமானம் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளது.
அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் ஒன்றே மீண்டும் இவ்வாறு அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த போயிங் 777 ரக விமானத்தில் 129 பயணிகளும், 14 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து முகக்கவசத்தை அணிய மறுத்த பயணியை காவல்துறையினர் விசாரணைகளுக்காக அழைத்து சென்றுள்ளனர்.
மேலும், விசாரணைகளுக்கு பின்னர் அவர் தமது விமான சேவையின் ஊடாக பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார் என அமெரிக்க விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.