மீண்டும் இந்தியாவிடம் இருந்து நிதியுதவி
இந்தியாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த சில தினங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் அங்கு கைச்சாத்திடப்படவுள்ளது என்றார்.
இலங்கை நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தப் பணம் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் நிதியமைச்சரின் இந்திய விஜயம் பெரும் வெற்றியடைந்ததாகவும், இதன் மூலம் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெற முடிந்ததாகவும், அதன் முதல் கட்டமே இந்த பில்லியன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.