நபர் ஒருவரால் இரு பெண்களுக்கு நேர்ந்த கதி ; காதலி மரணம்... மனைவி உயிர் பிழைத்தார்!
நபர் ஒருவரின் 60 வயதான காதலியும் 32 வயதான மனைவியும் ஒரே நாளில் உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் மனைவி காப்பாற்றப்பட்ட நிலையில் காதலி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் களுபோவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
களுபோவில பகுதியில் உள்ள நபர் ஒருவர் கணவனை இழந்த 60 வயதான பெண்ணுடன் தொடர்பில் இருந்துவந்த நிலையில், குறித்த பெண் தனது சொத்துக்களையும் குறித்த நபருக்கு ஏழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் இரகசியமான 32 வதான பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். நபரின் ரகசிய திருமணத்தை அறிந்த 60 வயதான பெண் புதிதாக திருமணம் செய்த 32 வயதான பெண்ணுடைய வீட்டுக்கு சென்று தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டுக்கு வந்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். அதே சமயம் தனது கணவர் 60 வயதான பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த 32 வயதான பெண்ணும் உயிரைமாய்க்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 60வயதான காதலி உயிரிழந்த நிலையில், 32 வயதான மனைவி காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த 60 வயது பெண் 40 வயதுடைய நபருக்கு எழுதிய பல பக்கங்களை கொண்ட கடிதமொன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்ற நிலையில் குறித்த சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.