3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் ரத்து
3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
License of 3 Fuel trucks have been suspended immediately by CEYPETCO and LIOC pending further investigations in to the 3 Incidents reported on social media on fuel transport trucks illegally unloading fuel. I Thank everyone who brought the illegal activities to our notice.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 18, 2022
இதன்போது 3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.