அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் ; 3 வாகனங்கள் சேதம்
கொட்டாவ அதிவேக வீதியின் நுழைவாயில் இருந்து காலி நோக்கிய இரண்டாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக கொள்கலன் லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை முந்திச் செல்ல பேருந்தொன்று முற்பட்ட போது அதற்கு பின்னால் வந்த கார் ஒன்று பேருந்தின் மீது மோதியுள்ளது.
விபத்தில் காரில் இருந்த இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கொள்கலன் லொறி , பேருந்து மற்றும் கார் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.